பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!

மாவட்ட ஆட்சியர் அலுவலக காலனி பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 80 சதவீத பார்வை திறன் குறைபாடு கொண்ட மாணவன் மதன் பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார்

Update: 2024-05-10 09:30 GMT

அரசு உயர்நிலை பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவன் மற்றும் அவனுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்கள்.

பார்வைத் திறன் குறைபாடு உள்ள மாணவன், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு உயர்நிலைப் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்து சாதனை.  மாணவனுக்கு மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் என அனைவரும் தனக்கு ஒத்துழைப்பு அளித்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என பெருமிதம் 

காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லப்பன் நகர் பகுதியில் வசிப்பவர்கள் வாசுதேவன் - சரிதா தம்பதியினர்.வாசுதேவன் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

இவரது மகன் மதன்,80% சதவிகிதம் பார்வை திறன் குறைபாடு உள்ளவராக உள்ளார். தனியார் ஆங்கிலப் பள்ளியில் பயின்று வந்த இவனை மாற்று சான்றிதழ் வாங்கி செல்லுமாறு கூறியதால் மனம் உடைந்துள்ளார். பல முயற்சிகள் செய்தும் எந்த பள்ளிகளிலும் இவனை சேர்க்க மறுத்ததுள்ளனர்.


இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாவட்ட ஆட்சியர் காலனியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு சேர்த்து படிந்து வந்துள்ளார்.

பார்வை திறன் குறைபாடு உள்ள நிலையிலும் பள்ளி ஆசிரியர்களின் முழுமையான ஒத்துழைப்போடும், பெற்றோரின் உதவியோடும், ஆர்வத்துடன் கல்வி பயின்று வந்தார்.

இந்த நிலையில் தற்போது நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்று தமிழில் 87, ஆங்கிலத்தில் 97, கணிதத்தில் 100,அறிவியல் 96,சமூக அறிவியலில் 97,என மொத்தம் 477 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்ற மாணவனாக சாதனை படைத்துள்ளான்.


பார்வை திறன் குறைபாடு உள்ள மாணவன் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ள சம்பவம் குறித்து அறிந்து அப்பகுதி மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மாணவனுக்கும், மாணவனுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவித்தனர்.

தான் ஒரு கல்லூரி பேராசிரியராக பணிபுரிய வேண்டும் என்பது லட்சியமாக கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News