வல்லம் - வடகால் சிப்காட் திட்டத்தில் OSR நிலத்தில் முறைகேடா, பொதுமக்கள் அச்சம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வல்லம் – வடகால் சிப்காட் திட்டத்தில் OSR நிலங்களின் முறைகேடு நடைபெற்றுள்ளதாக சந்தேகம் பொதுமக்களுக்கு எழுந்துள்ளது, புதிய மாவட்ட ஆட்சியர் இந்நிலையினை தெளிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் ‌எதிர்பார்கின்றனர்.

Update: 2021-07-08 05:00 GMT

காஞ்சிபுரம் பைல் படம்

கடந்த 20ஆண்டுகளுக்கு முன் வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் மறைமலைநகர் , ஓரிக்கை ஆகிய இடங்களில் மட்டுமே தொழிற்பேட்டை இயங்கியது. .

கடந்த திமுக ஆட்சியில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ‌அதன் சுற்று பகுதிகள் மெல்ல மெல்ல வளர்ச்சி கண்டு அதிமுக ஆட்சியில் ‌ காஞ்சிபுரம் மாவட்டம் தொழிற்சாலை நகரமாக மாறி வருகிறது.

பண்ணாட்டு தொழிற்சாலைகள் பல உருவாக்கியும் , சிறப்பு பொருளாதார மண்டலம் என உருவாக்கி உலக வரைபடத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் எந்த ஆட்சி வந்தாலும் அதிக கவனம் இந்த மாவட்டத்தில் செலுத்தபட்டு தொழிற்புரட்சி செய்து வருகின்றனர்.

இந்நிறுவனத்தை வரவழைக்க அரசு மானிய விலையில் நிலம் , வரிசலுகை , மின்கட்டண சலுகை என பல வழங்குவதால் தமிழகம் நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில் தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்காக சிப்காட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதற்காக சிறப்பு நில எடுப்பு குழு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் செயல்படுகிறது.

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே புதியதாக உருவான வல்லம் – வடகால் சிப்காட் பகுதிக்கு நிலம் எடுத்ததில் முறைகேடு நடந்துள்ளதாக  சந்தேகம் எழுந்துள்ளது.

ஊராட்சி பசுமைக்கு என ஓதுக்கபட்ட‌ திறந்த வெளி ஒதுக்கீடு நிலங்கள் ( OSR Land) அரசுக்கே முறைகேடு செய்து விற்கப்பட்டுள்ளாதா என சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த சிப்காட்டில் சுமார் 117 ஏக்கர்‌ OSR நிலத்தை விற்கபட்டதா எனும் சந்தேகம் பீமன்தாங்கல் நிகழ்விற்கு பிறகு ‌அனைவருக்கும் எழுந்துள்ளது. இதை மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

தொழிற்சாலை வந்தால் பல பேர் வேலை வாய்ப்பு பெறும் நிலையில் அரசு அதிகாரிகள் அதற்காக செயல்படாமல் தங்கள் சுய லாபாத்திற்கு அனைவரையும் உட்படுத்தி அவப்பெயரை ஏற்படுத்தாமல் இருக்க புதிய ஆட்சியர் இதை வெளிபடுத்து வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News