வழிப்பறி குற்றவாளிகள் மூவர் கைது: நகை ,செல்போன் , பைக் பறிமுதல்

காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய எல்லையில் குற்ற சம்பவங்களை தடுக்க காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த் தலைமையில் அமைக்கப்பட்டது

Update: 2022-08-06 16:45 GMT

காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுடன் காவல்துறையினர்.

காஞ்சிபுரம் தாலுக்கா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வழிப்பறி நடைபெறுவதாக புகார் வந்ததன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகரன் உத்தரவின் பேரில் , தாலுக்கா காவல் நிலைய ஆய்வாளர் பேசில் பிரேம் ஆனந்த், உதவி ஆய்வாளர் துளசி, தலைமை காவலர் முரளி மற்றும் காவலர் கோபி ஆகியோர் கொண்ட குழு  அமைக்கப்பட்டு தீவிர ரோந்து பணியில் அனைத்து  காவல்துறையினரும்  ஈடுபட்டனர்.

இந்நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் காஞ்சிபுரம் சதாவரத்தை சேர்ந்த   தனா என்ற தனசேகரன். இவர் மீது ஏற்கெனவே  விஷ்ணு  மீது காஞ்சி காவல் நிலையத்தில் 2012 ம் வருடம் நான்கு வழக்குகள் உள்ளது.தென்னேரி பகுதியை சேர்ந்த கோடீஸ்வரா   மற்றும் காஞ்சிபுரம் ஓக்கபிறந்தான் குளம் பகுதியை சேர்ந்த  மீஷா என்ற கோபி  ஆகியோர் வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்டது தெரியவந்ததின் பேரில் அவர்கள் மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து  7சவரன்  தங்க நகை ,  செல்போன் மூன்று,  இரண்டு மோட்டாக்பைக்     ஆகியவைகளை கைப்பற்றப்பட்டு எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி சிறையில் அடைக்கப்பட்டனர்.


Tags:    

Similar News