திருடப்பட்ட வாகனம் சிசிடிவி காட்சிகள் மூலம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் நேற்று அதிகாலை திருடப்பட்ட விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை திருடிய இருவரை சிசிடிவி காட்சிமூலம் 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-08 13:00 GMT

காஞ்சிபுரத்தில் டூ வீலர் திருடிய, திருடர்களை சிசிடிவி காட்சி மூலம் 24 மணிநேரத்தில் போலீசார் பிடித்தனர். (பைல் படம்)

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகே அமைக்கப்பட்ட வடிவேல் நகர். அப்பகுதியில் வசிக்கும் சுதாகர் என்ற இளைஞர் ரூபாய் 1.75 மதிப்பிலான இருசக்கர வாகனத்தை தனது வீட்டின் முன் நிறுத்திய நிலையில் நேற்று அதிகாலை 2 மர்ம நபர்கள் திருடி சென்றது அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவானது.

இந்நிலையில் இந்த சிசிடிவி காட்சிகளை கண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம் சுதாகர் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை தீவிர படுத்தினார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த சிறு காவேரிப்பாக்கம் அருகே இரு வாலிபர்கள் கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக வந்த ரகசிய தகவலையடுத்து அங்கு சென்ற காவல் நிலைய உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தனிப் பிரிவு காவலர்கள் சோமு மற்றும் விஜய் ஆகிய மூவரும் இணைந்து அவர்களை பிடிக்க முயன்றபோது தப்பி ஓடினர்.

தொடர்ந்து அவர்களைத் துரத்திச் சென்று இருவரையும் கைது செய்து அவர்கள் பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் பெரிய காஞ்சிபுரம் ராயக்கோட்டை பகுதியை சேர்ந்த சின்னா மற்றும் இந்திரா நகரை சேர்ந்த ராகவன் என்பதும் தெரியவந்தது.

நேற்று அதிகாலை வடிவேல் நகரில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது இவர்கள்தான் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இவர்களிடமிருந்து அந்த இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. சிசிடிவி காட்சி வெளியான 24 மணிநேரத்தில் காவல்துறை குழுவினர் இருசக்கர வாகன திருடர்களைப் பிடித்ததை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். சுதாகர் பாராட்டினார்.

Tags:    

Similar News