ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தமாகா வேட்பாளர் வேணுகோபால் வாக்குசேகரிப்பு

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி த.மா.கா வேட்பாளர் வேணுகோபால் ர் ஒன்றிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Update: 2024-04-05 14:42 GMT

ஸ்ரீபெரும்புதூர் நகரில்  த.மா.கா. வேட்பாளர் வேணுகோபால் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தேசிய ஜனநாயக கூட்டணி பொறுத்தவரை அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர் நரேந்திர மோடி என ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி த.மா.கா வேட்பாளர் வேணுகோபால் ஸ்ரீபெரும்புதூர் நகர வீதிகளில் வாக்குகள் சேகரித்த பின் தெரிவித்தார்.

மேலும் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு, விபத்துக்களை குறைக்க மேம்பாலங்கள் என அனைத்து திட்டங்களும் வருங்காலங்களில் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்ததாகவும் தெரிவித்தார்.


தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் கடும் வெயிலும் பொருட்படுத்தாது தீவிர பிரச்சாரத்தில் தனது கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

அவ்வகையில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக தமிழ் மாநில காங்கிரசை சேர்ந்த வி என் வேணுகோபால் என்பவர் அறிவிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இன்று ஸ்ரீபெரும்புதூர் சுற்றியுள்ள வல்லக்கோட்டை, ஏரியூர், போந்தூர் , ஸ்ரீபெரும்புதூர் நகரம் என இருபதுக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் தீவிர வாக்கு சேகரிப்பினை காலை 7:00 மணி முதல் திறந்தவெனில் சென்று பாஜக மாவட்ட செயலாளர் பாபு , பாமக மாவட்ட செயலாளர் ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து வாக்குகள் சேகரித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளிடம் பேசுகையில் , நாடாளுமன்ற தொகுதிகளை பொறுத்தவரை பிரதமர் மோடியே ஒவ்வொரு தொகுதியின் வேட்பாளர் எனவும் அவ்வகையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் வேட்பாளரும் அவரே எனவும் , தொழிற்சாலை நகரம் எனக் கூறப்படும் இப்பகுதியில் உள்ளூர் மக்களுக்கு அதிக வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை குறைக்க தேவையான இடங்களை கண்டறிந்து மேம்பாலங்கள் அமைக்கப்படும் எனவும், உயர்தர மருத்துவமனை இப்பகுதியில் அமைக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை பொதுமக்களிடம் அளித்து தற்போது பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாகவும், கூட்டணி கட்சியினர் அனைவரும் தனக்கு நல்ல ஒத்துழைப்பை அளித்து வாக்குகள் சேகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News