ஊரக உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர்கள் வைப்புத்தொகை விவரங்கள் வெளியீடு

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் செலுத்தவேண்டிய வைப்புத்தொகை குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2021-09-14 02:00 GMT

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம். பைல்படம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 என இரு தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.

இதில் போட்டியிடும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,  கிராம ஊராட்சி தலைவர் , ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்,  மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்  ஆகிய பதவிகளுக்கு போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் செலுத்தவேண்டிய வைப்பு தொகை குறித்த நிலவரங்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி,

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் -  ரூ.200.

ஊராட்சி தலைவர் - ரூ.600

ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ரூ.600

மாவட்ட ஊராட்சி வார்டு - ரூ.1000

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்:

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் - ரூ.100.

ஊராட்சி தலைவர் - ரூ.300

ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் - ரூ.300

மாவட்ட ஊராட்சி வார்டு - ரூ.500.

Tags:    

Similar News