தனியார் மருத்துவமனையில் கிராமப்புற ஐ சி யு சேவை: துவக்கி வைத்த காஞ்சிபுரம் மேயர்

காஞ்சிபுரம் பொன்னேரி கரை அருகே மாமல்லன் மருத்துவமனை பல்வேறு மருத்துவ சிகிச்சை நிபுணர்களுடன் இயங்கி வருகிறது.

Update: 2024-03-28 12:30 GMT

காஞ்சிபுரம் மாமல்லன் மருத்துவமனை மற்றும் சிபாக்கா நிறுவனம் இணைந்து கிராமப்புற ஐ சி யு சேவை அறிமுக விழாவில் கலந்து கண்டு சேவையை துவக்கி வைத்த மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜா அமர்நாத் உடன் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள்

காஞ்சிபுரம் பொன்னேரி கரை அடுத்த இந்திரா நகர் பகுதியில் இயங்கி வருகிறது ஸ்ரீ மாமல்லன் தனியார் மருத்துவமனை. இங்கு முப்பது படுகையில் கொண்ட பல்வேறு சிறப்பு மருத்துவர்கள் கொண்டு சிறுநீரகம், கண் , மகப்பேறு , எலும்பியல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில் இந்தியாவின் முன்னணி கிராமப்புற ஐ சி யூ சேவை வழங்குனரான சிபாக்கா நிறுவனம்  இந்தியா முழுவதும் அதனை விரிவாக்கி பல்வேறு கிராமப்புற ஏழை மக்களுக்கு சேவை செய்து வருகிறது.

இந்த சிபாக்கா நிறுவனம் 10 மாநிலங்களின் ஐ சி ய செயல்பாடுகளை திறன்பட தனது மருத்துவ வல்லுநர்கள் கொண்டு செயல்படுத்தி வரும் நிலையில் காஞ்சிபுரம் மாமல்லன் மருத்துவமனையுடன் இணைந்து இத் திட்டத்தை இன்று முதல் செயல்படுத்துகிறது.

இந்த மருத்துவ சேவை பிரிவினை காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ,  சிபாக்கா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜா அமர்நாத் மாமன் அண்ணன் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் அசுவதி சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் இணைந்து திறந்து வைத்தார்.

இதன்பின் நிகழ்ச்சியில் பேசிய மேயர் மகாலட்சுமி , குறைந்த மருத்துவக் கட்டணத்தில் இந்த சேவை மேற்கொள்ளும் நிறுவனம் மற்றும் மருத்துவமனைக்கு பாராட்டுகளை தெரிவிப்பதாக தெரிவித்தார்.

விழாவில் பேசிய சிபாக்கா நிறுவன நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜாஅமர்நாத்,  கடந்த சில ஆண்டுகளாகவே தீவிர சிகிச்சை சேவைகளுக்கான தேவை அதிகரித்து வருவதும் காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமப்புற மக்களுக்கு குறைந்த மருத்துவ கட்டண சேவையில் இந்த தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கும் வகையில் இதை உருவாக்கி உள்ளதாகவும் , திடீர் உடல் குறைவு ஏற்படும் நிலையில் தங்கள் சேமிப்பு மற்றும் உடைமைகளை அனைத்தையும் இழக்கும் நிலையில் இந்த நிறுவனம் சார்பில் அதை குறைந்த மருத்துவ கட்டண சேவையில் சிறப்பு மருத்துவர்கள் மூலம் அளிக்கும் நிலையில் அவர்களுக்கு மகிழ்ச்சியான தருணமாக அமையும் என்ற ஒரே நோக்கத்துடன் இதை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பல்வேறு கார்ப்பரேட் மருத்துவமனைகள் பல லட்சங்கள் மருத்துவ சேவை கட்டண சேவையில் உள்ள நிலையில் அதனை குறைக்கும் நோக்கிலேயே கிராமப்புற மக்கள் பயன்படுத்தி நோயின்றி வாழ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு சிறப்பு மருத்துவ  நிபுணர்கள் , சிபாக்கா நிறுவன அலுவலர்கள் , மருத்துவமனை ஊழியர்கள் , மருந்து விற்பனை பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News