அச்சமின்றி பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் காவல்துறை அணிவகுப்பு

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையில் காஞ்சிபுரம் முக்கிய வீதிகளில் காவல்துறையினர் அணிவகுப்பு பேரணி நடத்தினர்.

Update: 2024-03-27 09:45 GMT

காஞ்சிபுரத்தில்  அணிவகுப்பு பேரணி நடத்திய போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர்.

காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணியை எஸ்.பி சண்முகம்  கொடியசைத்து தொடக்கி வைத்து பேரணியிலும் பங்கேற்றார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அமையும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.


மேலும் காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணியும்  நடைபெற்றது.பேரணிக்கு மாவட்ட எஸ்.பி கே.சண்முகம் பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்து பங்கேற்றார்.பேரணியில் ஏடிஎஸ்பிக்கள் வெள்ளத்துரை, பாலகுமாரன்,சார்லஸ் சாம்ராஜ்,காஞ்சிபுரம் டிஎஸ்பி கி.முரளி உட்பட காவல் ஆய்வாளர்கள்,உதவி ஆய்வாளர்கள், தலைமைக்காவலர்கள் பலரும் பேரணியில் கலந்து கொண்டனர்.

பேரணி காஞ்சிபுரம் காந்தி சாலையில் தேரடியிலிருந்து தொடங்கி ராஜவீதிகள் வழியாக சென்று மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்து நிறைவு பெற்றது.

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கோயம்புத்தூரிலிருந்து வந்துள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையினர் உதவி கமாண்டன்ட் பிரதீஷ் தலைமையில் 100க்கும் மேற்பட்டோரும் துப்பாக்கி ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்றிருந்தனர்.

பொதுமக்கள் அனைவரும் அச்சமின்றி வாக்குபதிவு நடைபெறும் நாளன்று  வாக்குசாவடிக்கு வரும் வகையில் காவல்துறை  சிறப்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் அனைவரும் வாக்குபதிவு செய்ய வரவேண்டும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News