புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி; அமைச்சர் பெரியகருப்பன் திறப்பு

படப்பை அருகே மத்திய அரசின் ஜெகஜீவன் திட்டத்தின் கீழ் புதிய மேல் நிலை நீர் தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.

Update: 2021-07-20 09:30 GMT

புதிய மேல் நிலை நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன்.

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை இன்று ஆய்வு செய்தார்.

கரசங்கால் பகுதியில் நடைபெற்று வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி நடைபெறும் இடத்தில் ஆய்வு மேற்கொண்டு பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அவர்களிடம் பேசியபோது , இத்திட்டத்தில் மனசாட்சியுடன் பணியாற்றுங்கள் அதற்கான பலன் முதல்வர் பணி நாட்களை உயர்த்த விரைவில் நடவடிக்கை எடுப்பார் என அவர்களிடம் தெரிவித்தார்.

மேலும் மத்திய அரசு திட்டமான ஜல் ஜீவன் விடுப்பில் கட்டப்பட்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.

ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் ஊத்துக்காடு பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் சுய உதவிக்குழுக்கள் பயிரிடப்படும் பலவகையான கீரை வகைகளை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News