காஞ்சிபுரம் மாநகராட்சியுடன்‌ இணைக்க எதிர்ப்பு: 200க்கும் மேற்பட்டோர் மனு

காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் தங்கள் கிராமங்களை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Update: 2021-09-06 07:15 GMT

ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த 200 க்கும் மேற்பட்டோர்.

காஞ்சிபுரம் பெருநகராட்சி நடப்பு தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. அதற்காக காஞ்சிபுரம் அருகில் உள்ள கிராமங்களை இணைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம்,  வாலாஜாபாத் ஒன்றியம்,  முத்தியால்பேட்டை ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களையும் மாநகராட்சியுடன் இணைக்கபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்.வி.ரஞ்சித்குமார் தலைமையில் கிராம மக்கள் மனு அளித்தனர்.

இதில் தங்கள் ஊராட்சியில் ஆயிரத்து 464 குடும்பங்களில் 1040 குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளதாகவும், இவர்களுக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி கிடைத்து வாழ்வாதாரம் பெற்றுவரும் நிலையில் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டால் இந்த வாய்ப்பு பறிபோகும் என்பதால் இதனை தவிர்க்க வேண்டும் எனக் கோரி மனு அளித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News