5 நிமிடத்தில் முடிந்த மாநகராட்சி மாதாந்திர கூட்டம்: தீர்மானங்களை கிழித்த அதிமுகவினர்

காஞ்சிபுரம் மாநகராட்சியின் மாதாந்திர கூட்டத்தில் 33 தீர்மானங்களில் மண்டலம் மூன்றில் உள்ள தீர்மானங்கள் தவிர அனைத்தும் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-06-30 14:00 GMT

மாநகராட்சி மாதாந்திர கூட்டம் ஐந்து நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றதால் அதில் வழங்கப்பட்ட தீர்மானங்களை கிழித்த அதிமுக மாமன்ற உறுப்பினர்கள்.

காஞ்சிபுரம் மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் துணை மேயர் குமரகுருநாதன் தலைமையில் இன்று மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி 36 ஆவது வார்டு பகுதியில் தற்செயல் தேர்தல் நடைபெறுவதால் அந்த மண்டலத்தில் உள்ள மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது உறுப்பினர் அனைவரும் தீண்டாமை உறுதிமொழி மேயர் தலைமையில் ஏற்றனர்.

அதனைத் தொடர்ந்து மேயர் இன்றைய கூட்டத்தில் முப்பத்திமூன்று தீர்மானங்களில்  தேர்தல் நடைபெறும் மூன்றாவது மண்டலத்தில் உள்ள தீர்மானங்கள் தவிர அனைத்தும் றைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்த சில நொடிகளிலே கூட்டம் நிறைவுற்றதாக அறிவித்துவிட்டு கலைந்து சென்றார். இன்றைய கூட்டம் மொத்தம் ஐந்து நிமிடங்கள் கூட நடைபெறாமல் முடிந்ததால் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் இதனை கண்டித்து வழங்கப்பட்ட தீர்மானங்களை கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டு  சென்றனர் .

Tags:    

Similar News