வீட்டின் முன் உணவு கேட்டு தர்ணா செய்யும் குரங்குகள், பொதுமக்கள் வெளியே வர அச்சம்

காஞ்சிபுரம் மாகரல் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குரங்குகள் வீட்டுக்கு முன் அமர்ந்து உணவு கேட்டு தர்ணா செய்கின்றன, மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Update: 2021-07-28 06:00 GMT

காஞ்சிபுரம் அருகே உணவு கேட்டு வீடுகளை சூழ்ந்துள்ள குரங்குகள்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டத்தில் மாகரல் கிராமம் உள்ளது. இங்குள்ள பழைமையான சிவன் , விஷ்ணு மற்றும் சமண ஆலயங்கள் மிகவும் ஆன்மீக புகழ்பெற்றது.

இக்கிராமத்தில்  50 சதவீத வீடுகள் பழைய ஓடுகளால் வேயபட்டு கோடை ,  குளிர் காலங்களுக்கு ஏற்றவாறு இருப்பது சிறப்பான ஒன்று.

இந்நிலையில் இக்கிராமத்தில் கடந்த மூன்று மாத காலமாக 100க்கும் மேற்பட்ட குரங்குகள் கோயில் கோபுரங்களில் தங்கி அவ்வப்போது சாலை மற்றும் வீடுகளில் புகுந்து பொதுமக்களை அச்சமடைய செய்கிறது.

இதுமட்டுமில்லாமல் வீடுகளில் உள்ள ஓடுகளை பாழ்படுத்துவதால் புணரமைக்க பல ஆயிரக்கணக்கான பணம் செலவழிக்க வேண்டியுள்ளது.

உணவு கேட்டு வீட்டு வாசலில் கூட்டமாக தர்ணா போராட்டம்  போல் செய்வதால் பொது மக்கள் வெளியே வர அச்சமடைந்துள்ளனர்.

குரங்கு சில சமயங்களில் தாக்கவும் முயற்சிப்பதால் வனத்துறையினர் தக்க நடவடிக்கை பிடிக்க குரங்குகளை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags:    

Similar News