காஞ்சிபுரத்தில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்: மேயர் துவக்கிவைப்பு

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மற்றும் மாநகராட்சி சார்பில் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.

Update: 2022-03-20 03:30 GMT

வரும் முன் காப்போம் திட்டம் மருத்துவ முகாமினை துவக்கி வைத்த மேயர் மாகலட்சுமி யுவராஜ் மருத்துவ பரிசோதனையை ஆய்வு செய்தார்.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை  காஞ்சிபுரம் மாநகராட்சி இணைந்து கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மருத்துவ முகாமில் காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பி.டி.வி.எஸ் பள்ளியில் இன்று காலை 8மணிக்கு  துவங்கியது.

மருத்துவ முகாம் நினைத்து மாநகராட்சி மேயர்  மகாலட்சுமி யுவராஜ் மற்றும் துணை மேயர் குமரகுரு நாதன் துவக்கி வைத்தனர்.

இதில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்,  ஈசிஜி , ஆரம்ப கால புற்றுநோய் கண்டறிதல் ,  மகளிருக்கான சிறப்பு மருத்துவம் ,  இருதய நோய் ,  சிறுநீரகம்,  எலும்பு , காது மூக்கு தொண்டை,  கண் , குழந்தை நலம் , தோல் நோய் உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.

மேலும்  சித்த மருத்துவம் பிரிவிலும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட இம்முகாமில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் உரிய அறுவை சிகிச்சைக்குரிய மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார் .

இந்த மருத்துவ முகாம் தொடக்க நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் பிரியா குழந்தைவேலு ,  நிர்மலா , பூங்கொடி தசரதன், சந்துரு,  சுரேஷ் , சங்கர் ,  கயல்விழி சூசை, கௌதமி மற்றும் மாநகராட்சி ஆணையர் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News