காஞ்சிபுரம் தொகுதி திமுக , அதிமுக, பாமக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக, அதிமுக, பாமக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

Update: 2024-03-25 14:33 GMT

பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் கூட்டணி கட்சி தலைவர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட ஐந்து முக்கிய கட்சியினர் இன்று தேர்தல் அலுவலர் கலைச்செல்வியிடம் வேட்பு மனு தாக்கல் செய்து உறுதிமொழி ஏற்றனர்.

18 வது மக்களவைக்கான தேர்தல் நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டத்தில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கிய நிலையில் இன்று முக்கிய கட்சிகளான அதிமுக, திமுக , பாமக, நாம் தமிழர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வியிடம் தங்கள் வேட்பு மனுக்களை அளித்து உறுதிமொழிகளை ஏற்றனர்.அனைத்து கட்சியினரும் தங்களுக்கு மாற்று வேட்பாளரையும் நியமித்து அவரையும் மனு அளிக்க செய்து உறுதிமொழி ஏற்றனர்.


வேட்பு மனு தாக்கல் செய்வதை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் மூன்றடுக்கு பாதுகாப்பு நியமிக்கப்பட்டு சுமார் 150 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஏ டி எஸ் பி தலைமையில் பணியாற்றினர்.

தேர்தல் நேரம் முடிந்த நிலையில் முக்கிய கட்சிகள் தற்போது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் , இனி வரும் நாட்களில் சுயேட்சைகள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்யும் நிலை உள்ளது.

Tags:    

Similar News