காஞ்சிபுரம்: ஜல்ஜீவன் போர்வேல் திட்டத்தில் மோசடி-இளைஞர்கள் முற்றுகை!

காஞ்சிபுரம் அருகே ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் போர்வெல் அமைக்கும் பணியில் மோசடி நடந்ததாக கூறி இளைஞர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-06-06 04:15 GMT

போர்வெல் அமைக்கும் பணி


காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம், சிங்காடிவாக்கம் ஊராட்சியில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் அனைவருக்கும் குடிநீர் வழங்கும் நோக்கில் வாட்டர் போர்வெல் போடும் பணி  ஒப்பந்ததாரர்கள் மூலமாக நடைபெற்றது.

அரசாணைப்படி 600 அடி போர் வெல்ஸ் போடப்பட்டது. போர் வால்வில் மண் சரிவு ஏற்படாமல் இருக்க 6 இன்ச் பிவிசி குழாய், 100 அடிக்கு மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.

அங்கிருந்த OHD operator கொடுத்த தகவலின் பெயரில், போர் வெல்ஸ் பணி நடைபெறும் இடத்திற்கு சென்று அப்துல்கலாம் மக்கள் சேவை மன்ற இளைஞர்கள் மற்றும் கிராம பொது மக்கள் முற்றுகையிட்டனர். முறைகேடு நடப்பதாக கூறி பணிகளை தடுத்து நிறுத்தினர்.

பிறகு ஒப்பந்ததாரரின் மேற்பார்வையாளரிடம் இது குறித்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள்  வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். ஓப்பந்ததார் கொடுத்த அளவின்படி நான் பணி செய்தேன் என்று கூறினார். இதனை ஏற்றுக் கொள்ளாத  இளைஞர்கள், வாகனங்களை பறிமுதல் செய்த பிறகு இரவு முழுவதும் போர் வெல்ஸ் வாகனங்கள் செல்லவிடாமல் மறித்தனர். அதன்பிறகு துணை வட்டாரவளர்ச்சி அலுவலருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் அரசு விதிகளின்படி நடக்கும் என துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார். அதன் பேரில் அனைவரும் திரும்பிச் சென்றனர்.

Tags:    

Similar News