காஞ்சிபுரம் தொகுதியில் மூத்தோர்களுக்கான தபால் வாக்கு சேகரிப்பு பணி துவக்கம்

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்கு சேகரிக்கும் பணி துவங்கி உள்ளது.

Update: 2024-04-08 06:02 GMT

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 85 வயது தாண்டிய  மூதாட்டி ஒருவர் வீட்டில் இருந்தபடியே வாக்கு பெட்டியில் தனது வாக்கினை பதிவு செய்த காட்சி.

காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் 15 குழுவினர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்று தபால் வாக்கு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் மாவட்ட தேர்தல் நிர்வாகம் வாக்குப்பதிவு ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், என்பது வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் விண்ணப்ப படிவங்கள் 12 D வழங்கப்பட்டு அதன் பேரில் இன்று முதல் தபால் வாக்குப்பதிவு துவங்குகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 1039 மூத்த குடிமக்கள், 612 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 1651 நபர்கள் படிவம் 12 பெற்று தங்கள் விருப்பத்தை தெரிவித்திருந்தனர்.


அதன் அடிப்படையில் இன்று துவங்கப்படும் இந்த தபால் வாக்கு பதிவு வரும் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. ஸ்ரீபெரும்புத்தூரில் ஐந்து குழுவினரும் , ஆலந்தூரில் நாலு குழுவினரும் , காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் தலா மூன்று குழுவினரும் என மொத்தம் 15 குழுக்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு குழுவிலும் வாக்குப்பதிவு அலுவலர் , உதவி வாக்குப்பதிவு அலுவலர், நுண் பார்வையாளர், காவல்துறை மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர் என ஐந்து பேர் இதில் இடம் பெறுவர்.

இன்று காலை காஞ்சிபுரம் அடுத்த கிளார் , தாமல் உள்ளிட்ட பகுதிகளில் அலுவலர்களுக்கு அனைத்து கட்சி பிரமுகர்கள் உடன் வீட்டிற்கு சென்று தபால் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News