அரிசி, தானியங்களுக்கு ஜிஎஸ்டி வரி: காஞ்சிபுரத்தில் அரிசி ஆலைகள் மூடல்

அத்தியாவசிய பொருளான அரிசி மற்றும் தானிய பொருள்களுக்கு மத்திய அரசு விதித்துள்ள ஜிஎஸ்டி வரிகளை திரும்ப பெற கோரி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-07-16 10:45 GMT

அத்தியாவசிய உணவுப் பொருளான அரிசி மற்றும் தானியங்களுக்கான ஜிஎஸ்டி வரியை திரும்ப பெறக் கோரி அரிசி ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட நான்கு சங்கத்தினர் சார்பில் விழிப்புணர்வு கூட்ட நடைபெற்றது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் தானியங்களுக்கு ஐந்து சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிப்பை அமல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களான அரிசி மற்றும் தானியங்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை வலியுறுத்தி மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்ப பெறக் கோரி காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகே தானிய தரகு மண்டி காரர்கள்,அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல் அரிசி வியாபாரிகள், காஞ்சிபுரம் வர்த்தக சங்கத்தினர் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தினர்.

இந்நிலையில்  மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியும் , அனுமதியில்லாமல்  ஊர்வலம் செல்ல முயன்றனர்.

ஊர்வலம் செல்ல முன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைதுசெய்ய முற்பட்டதை தொடர்ந்து சமரசம் செய்து கொண்டு கலைந்து சென்றனர்.

வணிகர்கள் மற்றும் தானிய தரகு வியாபாரிகள், மண்டிக்காரர்களின் திடீர் ஊர்வலத்தினால் காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News