இனியாவது கவனிப்பார்களா‌ அண்ணாவை‌ ??

ஸ்ரீபெரும்புதூர்: சேதமடைந்த நிலையில் உள்ள அண்ணாவின் சிலையை சீரமைக்க வலியுறுத்தினர்.

Update: 2021-05-07 12:00 GMT

ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் பழைய கட்டிடத்தில் இயங்கி வந்ததால், கடந்த 2011ஆம் ஆண்டு பழைய கட்டிடத்தை இடித்து விட்டு ரூ1.49 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

இதையடுத்து புதிய கட்டிடத்தை அப்போதைய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்துவைத்தார். புதிய கட்டிடம் திறப்பு விழாவை முன்னிட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலக வளாகத்தில் தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் சிலையும் திறந்துவைப்பட்டது.

இதையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், திமுகவினர் வைத்த சிலை என்ற காரணத்திற்காக கடந்த 10 வருடங்களாக அண்ணா சிலை பராமரிக்கப்படாமல் இருந்து வந்தது. இதனால் சிலையின் வண்ணபூச்சிகள் உதிர்ந்து சிமெண்ட் கலவைகளும் உதிர்ந்து, கைகள் உடைந்து சிலை சேதமடைந்து காணப்பட்டு வருகிறது.

தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணாவின் சிலை சிமெண்ட் கலவைகள் வெளியே தெரியும் வண்ணம் உள்ளது. எனவே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சேதமடைந்த அண்ணாவின் சிலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News