தமிழ்நாடு : 37 முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம்

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று அதிரடியாக முதன்மை கல்வி அலுவலர் நிலையிலுள்ள 37 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2021-08-12 12:30 GMT

பைல் படம்

தமிழக பள்ளிக் கல்வித்துறை வழியில் வகுப்பு 3 சார்ந்த முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் 37 அலுவலர்களை நிர்வாக நலன் கருதி பணியிடம் மாற்றம்  செய்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதில் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த ஆறுமுகம் திருவள்ளூர் முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்

கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றி வந்த கே.ரோஸ் நிர்மலா செங்கல்பட்டு  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றி வந்த எஸ்.அருள்செல்வம் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட அனைவரும் அந்தந்த பகுதிகளில் பொறுப்புகளை உடனடியாக பொறுப்பேற்க ஏற்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

Similar News