காஞ்சிபுரம் : அரசு தலைமை மருத்துவமனையில் 24 மணி நேரமும் தடுப்பூசி பணி

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2021-08-24 04:15 GMT

24மணி நேரமும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனும் அறிவிப்பு பலகை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50க்கு கீழ் உள்ளது. பாதிப்பு குறைவாக இருப்பினும் தொடர்ந்து பொதுமக்களுக்கு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இருவகையான தடுப்பூசிகள் முன்பதிவின் அடிப்படையில் நேற்றுவரை செலுத்தப்பட்டது. இரு தினங்களுக்கு முன் தமிழக அரசு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் இருபத்தி நான்கு மணி நேரம் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இன்று முதல் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கி உள்ளது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் அரசு அலுவலகங்களில் பணிபுரிவோர் மற்றும் இதர பொதுமக்கள் என அனைவரும் தங்களுக்கு உரிய ஓய்வு நேரத்தில் அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்பதால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த ஆறு மாத காலத்தில் 34 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News