நவரை பருவத்திற்கு காஞ்சியில் 123 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐந்து ஒன்றியங்களில் 62,615 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.

Update: 2023-03-04 02:30 GMT

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐந்து ஒன்றியங்களில் 62,615 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்ட செய்தி கூறிப்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களாக இயல்பான மழை அளவை காட்டிலும் கூடுதலாக நல்ல மழை பெய்துள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்கள் அனைத்தும் நீர் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் அதிகப்படியான பரப்புகளில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். கே.எம்.எஸ் 2022 – 23 ஆம் ஆண்டு சொர்ணவாரி மற்றும் சம்பா பருவத்தில் 59,495 ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டு 01.09.2022 முதல் 29 இடங்களில் தற்காலிக அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் திறந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நெல் கொள் முதல் பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது நவரை பருவத்தில் 62,615 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதன் அறுவடை காலம் மார்ச் 2023 மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ள நிலையில் விவசாயிகளிடமிருந்து அறுவடை செய்யும் நெல்லினை முழுமையாக கொள் முதல் செய்யவேண்டும் என விவசாயிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்து ஆண்டைவிட கூடுதல் இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் தற்காலிக அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் திறந்து நெல் கொள் முதல் செய்ய உள்ளது.

அதன்படி, காஞ்சிபுரம் வட்டாரத்தில் நத்தப்பேட்டை, தேனம்பாக்கம், கீழம்பி, மேல்கதிர்பூர், முசரவாக்கம், பெரும்பாக்கம், ஆரியபெரும்பாக்கம், கூரம், முட்டவாக்கம், சிறுனைப்பெருகல், தாமல், ஆற்ப்பாக்கம், அவளூர், களக்காட்டூர், இளையனார்வேலூர், கம்பராஜபுரம், காவாந்தண்டலம், மாகரல், பெரமநல்லூர், தம்மனூர், (விட்சந்தாங்கல்) காலூர் ஆகிய இடங்களிலும்,

வாலாஜாபாத் வட்டாரத்தில் தொள்ளாழி, வில்லிவலம், நத்தாநல்லூர், மதுராநல்லூர், பூசிவாக்கம், ஊத்துக்காடு @ நெய்குப்பம், பழையசீவரம், தேவரியம்பாக்கம், கட்டவாக்கம், தென்னேரி, அகரம், அய்மச்சேரி, குண்ணவாக்கம், திருவெங்கரணை, வேளியூர், கோவிந்தவாடி, கோவிந்தவாடி (கம்மவார்பாளையம்), படுநெல்லி, புள்ளலூர், கொட்டவாக்கம், பள்ளம்பாக்கம், சேக்கன்குளம், நல்லூர், சிட்டியம்பாக்கம், இலுப்பப்பட்டு, வையாவூர், சிங்காடிவாக்கம், ஆலப்பாக்கம், பரந்தூர், காரை, சிறுவாக்கம், 144 தண்டலம், புரிசை, தொடூர் ஆகிய கிராமங்களிலும்

 உத்திரமேரூர் வட்டாரத்தில் பள்ளம்பாக்கம், திருமுக்கூடல், பழவேரி, பினாயூர், அரும்புலியூர், கலியப்பேட்டை, காவித்தண்டலம், கலியாம்பூண்டி, அரசாணிமங்கலம், பென்னலூர், அம்மையப்பநல்லூர், பூந்தண்டலம், ராவத்தநல்லூர், 19 தண்டரை, இளநகர், பெருநகர், குண்ணவாக்கம், தோட்டநாவல், காட்டாங்குளம், சிறுமயிலூர், மாம்புதூர், பாலேஸ்வரம், நெற்குன்றம், மலையான்குளம், நெய்யாடுபாக்கம், வயலக்காவூர், சாலவாக்கம், குறும்பிறை, சிறுபினாயூர் @ எஸ். மாம்பாக்கம், எடையாம்புதூர், ஒழையூர், அண்ணாத்தூர், பொற்பந்தல், பேரனக்காவூர், மருதம், புலிவாய், திருப்புலிவனம், கடலமங்கலம், காவாம்பயிர், மருத்துவம்பாடி, அழிசூர், உத்திரமேரூர் @ ஆணைப்பள்ளம், வேடபாளையம், சின்னமாங்குளம், அத்தியூர் மேல்துளி, காவனூர்புதுச்சேரி, அகரம்துளி, நாஞ்சிபுரம், மாம்பாக்கம், கரும்பாக்கம், காவணிப்பாக்கம், மானாம்பதி, ஆனம்பாக்கம், மேனலூர் ஆகிய கிராமங்களிலும்

 திருப்பெரும்புதூர் வட்டாரத்தில்  பிச்சிவாக்கம், எடையார்பாக்கம், மதுரமங்கலம், வெள்ளாரை,104 நாவலூர், மேல்மதுரமங்கலம், இராமானுஜபுரம், சந்தவேலூர், பாப்பான்குழி, எச்சூர் ஆகிய கிராமங்களிலும் குன்றத்தூர் வட்டாரத்தில் மணிமங்கலம், சோமங்கலம், பழந்தண்டலம், வடக்குப்பட்டு ஆகிய கிராமங்களில் தற்காலிக அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் திறந்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட தற்காலிக அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில் விவசாயிகள் தங்களது அறுவடை நெல் மூட்டைகளை விற்பனை செய்ய ஏதுவாக 06.03.2023 முதல் இணைய வழி பதிவு செய்ய தற்காலிக நெல் கொள் முதல் நிலையங்களில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, விவசாயிகள் நெல் அறுவடை செய்த பின்பு கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நெல் சாகுபடி சான்று, சிட்டா / அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதார் நகலுடன் சென்று நேரடியாக பதிவு செய்து தங்களது நெல் மூட்டைகளை விற்பனை செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்கள்.

Tags:    

Similar News