வாக்காளர்களை கவர திராவிட கட்சிகள் டிஜிட்டல் புரட்சி

Update: 2021-02-12 04:15 GMT

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களை கவர டிஜிட்டல்முறையை அரசியல் கட்சிகள் கையில் எடுத்துள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 இன்னும் சில மாதங்களில் வரவுள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த முன்னணி தலைவர்கள் தங்கள் தேர்தல் பரப்புரையை கடந்த மாதமே துவக்கி தீவிரமாக தமிழகம் முழுவதும் வாக்காளர்களை சந்தித்து தங்கள் சாதனைகளையும் எதிரணியின் பலவீனத்தையும் சுட்டி காட்டி வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க செல்போன் மூலமும் தங்கள் சாதனைகளை கூறி வருகின்றனர். இதன் அடுத்த கட்டமாக நிர்வாகிகளின் வீடுகளில் தலைவர்களை முன்னிறுத்திய வாசகங்கள் அடங்கிய டிஜிட்டல் போர்டுகள் காஞ்சிபுரம் நகர் முழுவதும் திமுக சார்பில் வைத்துள்ளனர். இதேபோல் அதிமுகவும் தங்கள் நிர்வாகிகள் இல்லங்களில் சாதனைகள் அடங்கிய டிஜிட்டல் போர்டுகளை வைக்க தயார் செய்து அமைத்து வருகிறது.

நவீன விஞ்ஞான காலம் என்பதால் காஞ்சிபுரம் அதிமுக நிர்வாகி ஜெயராஜ் என்பவர் தனது வீட்டின் அதிமுகவின் சாதனைகளை கூறும் டிஜிட்டல் வீடியோ ஸ்கீரின் அமைத்து ஒளிபரப்பை துவக்கி உள்ளார். இதனால் காஞ்சிபுரம் நகரில் டிஜிட்டல் யுத்தியை பயன்படுத்தி தேர்தல் வேலைகளை திராவிட கட்சிகள் துவங்கி வாக்காளர்களை கவர்ந்து வருகிறது.

Tags:    

Similar News