காஞ்சிபுரத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி

Update: 2021-02-02 10:15 GMT

காஞ்சிபுரத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவியை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி வழங்கினார்.

கொரோனா காலத்தில் சாலையோர மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை சந்தித்த நிலையில் பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான ஆத்ம நிர்பர் நிதி திட்டத்தின் கீழ் ஒரு வருட கால அவகாசத்தில் ரூபாய் பத்தாயிரம் அளிக்கப்பட்டு மாதந்தோறும் 855 வீதம் செலுத்தி இறுதியில் முறையாக செலுத்துபவர்களுக்கு 7 சதவீத வட்டி மற்றும் மின்னணு பரிவர்த்தனையில் செலுத்துபவர்களுக்கு ரூபாய் 1200 ஊக்கதொகையாக திருப்பி அவர்களின் வங்கி கணக்கில் வைக்கப்படும் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6433 விண்ணப்பங்கள் பதிவேற்றபட்டு அதில் முதல்கட்டமாக 711 நபர்களுக்கு கடன் வழங்க பரிந்துரைக்கப்பட்டது.அவ்வகையில் காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பாக 80 நபர்களுக்கு இன்று தலா பத்தாயிரம் ரூபாய் கடனுதவியை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி அளித்து துவக்கி வைத்தார்.இதில் பேசிய மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி , கடன் பெறும் வியாபாரிகள் முறையாக செலுத்தி வங்கி அளிக்கும் ஊக்கத் தொகைகளை பெற்று தொடர்ச்சியாக வங்கியிடம் இணக்கமான இணைப்பை ஏற்படுத்தி வாழ்வில் வளம் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.இவ்விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சண்முகராஜா , பஞ்சாப் நேஷனல் வங்கி தென்மண்டல துணை மேலாளர் முகமது மக்கது அலி , காஞ்சி வங்கி மேலாளார் பீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News