டி.என்.பாளையம் அருகே காட்டு யானை வனப்பகுதிக்குள் விரட்டி அடிப்பு

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே விவசாய தோட்டத்திற்குள் புகுந்த காட்டுயானையை வனத் துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர்

Update: 2023-08-26 06:00 GMT

விவசாய தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை.

கோபி அடுத்த டி.என்.பாளையம் அருகே விவசாய தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சத்தியமங்கலம், பவானிசாகர், ஆசனூர், தாளவாடி, ஜீர்கள்ளி, தலமலை, கேர்மாளம், கடம்பூர் டி.என்.பாளையம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக வசித்து வருகின்றன.

இந்நிலையில், டி.என்.பாளையம் வனப்பகுதியில் உள்ள  குண்டேரிப்பள்ளம் அணைப்பகுதியில் உள்ள வனப்பகுதியை விட்டு நேற்று இரவில் வெளியேறிய ஒற்றை காட்டு யானை உணவு தேடி பங்களாப்புதூர் வழியாக எருமைக் குட்டை, அண்ணா நகர் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக இரவு கணக்கம்பாளையம் சுண்டக்கரடு மலைவாழ் மக்கள் வசிக்கும் காலனி குடியிருப்புக்குள் புகுந்தது.

இதைக்கண்டு அச்சமடைந்த அப்பகுதி பொதுமக்கள் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இத்தகவலறிந்த டி.என். பாளையம் வனத்துறையினர் உடனடியாக வந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானையை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு வனப்பகுதிக்குள் விரட்டினர்.

Tags:    

Similar News