அந்தியூர் பெரிய ஏரியில் சிக்கிய 17 கிலோ எடை கொண்ட ராட்சத கட்லா மீன்..!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பெரிய ஏரியில் 17 கிலோ எடை கொண்ட ராட்சத கட்லா மீன் சிக்கியது.

Update: 2024-05-20 00:30 GMT

அந்தியூர் பெரிய ஏரியில் சிக்கிய ராட்சத கட்லா மீன்கள்.

அந்தியூர் பெரிய ஏரியில் 17 கிலோ எடை கொண்ட ராட்சத கட்லா மீன் சிக்கியது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பெரிய ஏரி, கெட்டிசமுத்திரம் ஏரி, வரட்டுப்பள்ளம் அணை ஆகியவற்றில் வளர்ப்பதற்காக கடந்த 1 ஆண்டுக்கு முன்பு கட்லா, ரோகு, சிலேபி போன்ற மீன் குஞ்சுகள் விடப்பட்டன. கடந்த சில மாதங்களாக ஏரி மற்றும் அணையில் மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை, அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து மீன்களை வாங்கி செல்கின்றனர்.


இந்த நிலையில், நேற்று காலை அந்தியூர் பெரிய ஏரியில் மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டன. அவ்வாறு பிடிக்கப்பட்ட மீன்களில் 17 கிலோ மற்றும் 15 கிலோ எடையிலான 2 ராட்சத கட்லா மீன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டன. இதை மீன் வாங்க வந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்ததுடன், விரும்பி வாங்கி சென்றனர். இதில் கட்லா, ரோகு மீன்கள் கிலோ ரூ.170க்கும், சிலேபி கிலோ ரூ.120க்கும் விற்பனை ஆனது..

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் கூறுகையில், கட்லா மீன் அதிக பட்சமாக இரண்டரை கிலோ எடை வரை வளரும். அதுவும் 6 மாதத்துக்குள் வளர்ந்து விடும். ஆனால் தற்போது பிடிபட்ட மீன்கள் வலைகளுக்குள் சிக்காமல் 2 ஆண்டுகளுக்கு மேல் வளர்ந்திருக்கும். அதனால் தான் இந்த அளவுக்கு எடை வந்து உள்ளது என்றனர். 

Tags:    

Similar News