ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்

Erode news- ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் வைகாசி விசாகத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை (இன்று) வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2024-05-19 06:30 GMT

Erode news- ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Erode news, Erode news today- ஈரோடு கோட்டை ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை (இன்று) வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

ஈரோடு கோட்டை பகுதியில் ஆயிரம் ஆண்டுகால பழமையான ஸ்ரீ வாருணாம்பிகா சமேத ஆருத்ர கபாலீஸ்வரா் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் தோ்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி, நடப்பாண்டு திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.


இதையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நிகழ்ச்சி இன்று  நடைபெற்றது. இதில் ஸ்ரீ வருணாம்பிகா சம்தே ஆருத்ர கபாலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து வருணாம்பிகா சம்தே ஆருத்ர கபாலீஸ்வர் உற்சவ சிலைகள் தேரில் வைக்கப்பட்டு தேரை சிவனடியார்கள், பக்தர்கள் என ஏராளமானோர் தேரை வடம் பிடித்து அரோகரா கோஷத்துடன் தேரை இழுத்து சென்றனர்.

தேர் ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு,பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பு ஆகிய முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்து. விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான 22ம் தேதி கோவில் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவமமும், சிம்மாசனத்தில் திருவீதி உலாவும் நடைபெறவுள்ளது. 

Tags:    

Similar News