நம்பியூர் பகுதியில் வெளுத்து வாங்கிய மழையால் உடைந்த குளம்..!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் பகுதியில் நேற்று மாலை பெய்த கனமழையால் சந்தனநகர் பகுதியில் இருந்த குளம் நிரம்பி உடைந்தது.

Update: 2024-05-20 00:45 GMT

நம்பியூர் சந்தன நகர் பகுதியில் உள்ள குளம் உடைந்து தண்ணீர் வெளியேறியது.

Erode News, Erode Today News, Erode Live Updates - கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் பகுதியில் நேற்று மாலை பெய்த கனமழையால் சந்தனநகர் பகுதியில் இருந்த குளம் நிரம்பி உடைந்தது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை சுமார் 2 மணி கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால், நம்பியூர் அருகே உள்ள சந்தன நகர் பகுதியில் 30 ஏக்கர் பரப்பளவில் இருந்த உள்ள குளம் நிறைந்து கரை உடைந்தது. இதனால் குளத்தில் இருந்து வெளியேறி வெள்ளம் அங்குள்ள வீடுகளை சூழ்ந்தது.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட பொதுமக்கள் வெள்ளாளபாளையத்தில் உள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளி, நம்பியூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர். அதேவேளையில், குளத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News