குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம்: தமிழக முதல்வருக்கு வழக்கறிஞர் பிரிவு நன்றி

செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் ராஜேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2023-03-20 11:15 GMT

தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் ராஜேந்திரன் (பைல் படம்). 

தமிழக அரசு பட்ஜெட் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் உதவித்தொகை வரும் செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என்ற அறிவிப்பு குடும்பத் தலைவியின் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் சி.எம்.ராஜேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அதில் அவர் கூறியதாவது,  மிகுந்த நிதிச் சுமைக்கிடையே தமிழக அரசின் நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் மிக சிறந்த பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இதில் மிக முக்கிய அம்சமாக வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்திருப்பதும், இதற்காக இந்த நிதிநிலை அறிக்கையில் ரூ 7000 கோடி ஒதுக்கி இருப்பது மிகுந்த வரவேற்பிற்குரியது.

மேலும் இடம் வீடு வாங்குபவர்களுக்கான வரிச் சுமையை குறைக்கின்ற வகையில் பத்திர பதிவு கட்டணத்தை நான்கு சதவீதத்திலிருந்து இரண்டு சதவீதமாக குறைத்து இருப்பது புதிதாக பத்திரம் பதிவு செய்பவர்களை ஊக்குவிப்பதுடன் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும். சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் எழுதிய புத்தகங்கள் அனைத்தும் அரசு தமிழாக்கம் செய்து வெளியிடும் என்பது சட்டத்துறையினருக்கும் பொது மக்களுக்கும் மிகுந்த நன்மை அளிக்கக் கூடியது.

நாட்டின் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்யும் படை வீரர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத்தொகை 20 லட்சத்திலிருந்து 40 லட்சமாக உயர்த்தி அறிவித்திருப்பது சிறப்பானது. ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கான துணைத் திட்டங்களை அமல்படுத்த சிறப்பு சட்டம் இயற்ற குழு அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது.

நிலத்திற்கான சந்தை மதிப்பு நீண்ட காலமாக உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது சந்தை மதிப்பை உயர்த்துவது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. தொழில் நகரமான கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் துவக்க ரூ ஒன்பதாயிரம் கோடி ஒதுக்கி இருப்பது கோவையில் தொழில் துறையின் வளர்ச்சிக்கு மிகவும் பேருதவியாக இருக்கும்.

நடப்பு நிதி ஆண்டில் புதிதாக ஒரு லட்சம் முதியோருக்கு ஓய்வூதியம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது முதியோருக்கு மிகவும் பாதுகாப்பு அளிக்கும் திட்டமாகும். அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி அளிப்பதற்காக ரூ 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது குடும்பத் தலைவிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும் வழி வகுக்கும் ஒட்டுமொத்தத்தில் தமிழக அரசு பட்ஜெட் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போது பிரச்சாரத்தில் செய்வதை சொல்வோம் சொல்வதை செய்வோம் என்பதை விட சொல்லாததையும் செய்வோம் என்று கூறியதை நிரூபித்து காட்டும் வகையில் இந்த பட்ஜெட் சிறப்பாக அமைந்துள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் மாநிலச் செயலாளர் சி எம் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News