ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை சார்பில் நீர்மோர் பந்தல்

ஈரோடு மாநகர் பகுதியில் ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.

Update: 2024-05-04 11:15 GMT

ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் பட்டய தலைவர் டாக்டர்.சகாதேவன், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளையின் தலைவர் ராஜமாணிக்கம் ஆகியோர் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினர்.

ஈரோடு மாநகர் பகுதியில் ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.

ஈரோட்டில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்களின் நலனுக்காக ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை மற்றும் ஈரோடு மாநகராட்சி இணைத்து ஈரோட்டின் மையப்பகுதிகளான வீரப்பன்சத்திரம், பெரிய அக்ரஹாரம், திருநகர் காலனி மற்றும் கருங்கல்பாளையம் ஆகிய 4 இடங்களில் நீர்மோர் பந்தல் அமைத்துள்ளது.

இந்த நீர்மோர் பந்தலை ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் பட்டய தலைவர் டாக்டர்.சகாதேவன், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளையின் தலைவர் ராஜமாணிக்கம் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினர். இதில், ரோட்டரி முன்னாள் ஆளுநர் சிவசங்கரன், சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் கமலநாதன், செயலாளர் விக்னேஷ்குமார், பொருளாளர் சுரேஷ், ஆத்மா அறக்கட்டளையின் செயலாளர் ராஜ மாணிக்கம், பொருளாளர் சரவணன் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், தொடர்ந்து 30 நாட்களுக்கு வழங்க உள்ளதாக உறுதி அளித்துள்ளனர். பொதுமக்கள் மற்றும் பாதசாரிகள் கட்டாயம் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News