மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர் பயணம்..!

மதுரையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 41வது மாநில மாநாடு, வணிகர் உரிமை முழக்க மாநாடாக‌ நாளை (5ம் தேதி) நடைபெறுகிறது. இதில், பங்கேற்க ஈரோட்டில் இருந்து 4,000 பேர் செல்கின்றனர்.

Update: 2024-05-04 02:45 GMT

ஈரோடு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு.

மதுரையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 41வது மாநில மாநாடு, வணிகர் உரிமை முழக்க மாநாடாக நாளை (5ம் தேதி) நடைபெறுகிறது. இதில், பங்கேற்க ஈரோட்டில் இருந்து 4,000 பேர் செல்கின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட தலைவர் ஆர்.கே.சண்முகவேல் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

மத்திய, மாநில அரசுகளுக்கு ஜி.எஸ்.டி. வருவாயாக ரூ.2 லட்சம் கோடியை வணிகர்கள் செலுத்துகின்றனர். சிறு, குறு வணிகர்கள், தொழில் முனைவோர், உற்பத்தியாளர்கள் வணிகம் செய்வதில் பல சிக்கலை சந்திக்கின்றனர். ஆள் பற்றாக்குறை, பல வகை வரிகள் சட்டங்களால் சிறு, குறு வணிகர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

அனைத்து சில்லறை வணிகத்திலும், கார்பரேட் நிறுவனங்கள் நுழைந்து விட்டனர். ஆன்லைன் வர்த்தகமும், சிறு வணிகத்தை விழுங்கி வருகிறது. இந்த பாதிப்புகளில் இருந்து தொழில், வணிகத்தை பாதுகாக்க, அனைத்து தரப்பு வணிகர்களும் இணைந்து மத்திய, மாநில அரசிடம் நமது கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.

இதற்காக நாளை (5ம் தேதி) மதுரையில் நடைபெற உள்ள வணிகர் உரிமை முழக்க மாநாட்டில் 3 லட்சம் வணிகர்கள் பங்கேற்க உள்ளனர். இதில், ஈரோட்டில் இருந்து 4,000 பேர் மதுரை செல்ல உள்ளோம். அமைச்சர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில், அமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை வகித்து பேசுகிறார்.

மாநாட்டின் மாநில விளம்பர பொறுப்புகளை ஈரோடு மாவட்ட இளைஞரணி செயலாளர் லாரன்ஸ் ரமேஷ், மாவட்ட தொழில் நுட்ப அணி பொறுப்பாளர் எஸ்.கே.எம்.பாலகிருஷ்ணன் ஆகியோர் தங்களது பணிகளை கடந்த ஒரு மாதமாக சிறப்பாக செய்து வருகின்றனர். மதுரை மாநாட்டில் வணிகர்கள் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாநாட்டுக்கு வணிகர்களை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை பேரமைப்பின் ஈரோடு மாவட்ட செயலாளர் பொ.இராமசந்திரன், பொருளாளர் உதயம் பி.செல்வம் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News