ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான ஆடை வடிவமைப்பு போட்டி
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் ஆடை வடிவமைப்பு மற்றும் கவின் புனைவியல் துறை சார்பில் பேஷன் ஜிங்காரோ-25 என்ற தேசிய அளவிலான ஆடை வடிவமைப்பு போட்டி நடைபெற்றது.;
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் ஆடை வடிவமைப்பு மற்றும் கவின் புனைவியல் துறை சார்பில் பேஷன் ஜிங்காரோ-25 என்ற தேசிய அளவிலான ஆடை வடிவமைப்பு போட்டி நடைபெற்றது.
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில், ஆடை வடிவமைப்பு மற்றும் கவின் புனைவியல் துறை சார்பில் பேஷன் ஜிங்காரோ-25 என்ற தேசிய அளவில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியின் நிகழ்ச்சிக்கு ஆடை வடிவமைப்புத்துறை பேராசிரியரும் துறைத் தலைவருமான எஸ். மஞ்சுளா வரவேற்புரையாற்றினார்.
கல்லூரியின் தாளாளர் பி.டி.தங்கவேல் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் எச்.வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார். இப்போட்டியில், தேசிய அளவில் 30க்கு மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இதில், பேஸ் பெயிண்டிங், நெயில் ஆர்ட், ஆர்ட் ஃப்ரம் வேஸ்ட், பிரைடல் மேக்கப், பேஷன் ஷோ குரூப் டான்ஸ் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளுக்கு நடுவர்களாக நடிகர், மாடல் & ஸ்டைலிஸ்ட் பி.தீபக், ஹே விமன்ஸ்வேர் உரிமையாளர் ஹரி நந்தினி சங்கீத் மற்றும் இத்துறையின் முன்னாள் மாணவர்களும் நடுவர்களாகக் கலந்து கொண்டனர்.
ஆடை அலங்காரப் போட்டியில் பல்வேறு மாநிலத்தவர்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பிரதிபாலிக்கும் விதமாக, பன்னாட்டு ஆடைகளை அணிந்து, மாணவ மாணவியர் ஒய்யாரமாக நடந்து வந்தனர்.
அது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. பல்வேறு போட்டிகளில் பரிசுகளை வென்ற போட்டியாளர்களுக்கும் இப்போட்டியில் மிகவும் தனித்துவமான முறையில் ஆடை வடிவமைக்கப்பட்ட போட்டியளர்காளுக்கு "மிஸ்டர் ஜிங்காரோ" மற்றும் "மிஸ் ஜிங்காரோ" தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
பொதுத் தேர்ச்சி கோப்பையை திண்டுக்கல் காந்திகிராம் கிராமிய கழகம் (தன்னாட்சி பல்கலைக்கழகம்) வென்றது. இந்த நிகழ்ச்சியில், ஆடை வடிவமைப்புத் துறை பேராசிரியர்களும் பல்வேறு துறைப் பேராசிரியர்களும் துறை மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இறுதியாக ஆடை வடிவமைப்புத்துறை உதவிப் பேராசிரியர் ஆர். ராஜாகுமார் நன்றி கூறினார். இதற்கான, ஏற்பாடுகளை இத்துறையின் பேராசிரியர்களும், மாணவர்களும் செய்திருந்தனர்.