வள்ளலார் நினைவு தினம்: பிப்.11ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்
வள்ளலார் நினைவு தினத்தை ஒட்டி, வரும் பிப்ரவரி 11ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.;
டாஸ்மாக் (பைல் படம்).
வள்ளலார் நினைவு தினத்தை ஒட்டி, வரும் பிப்ரவரி 11ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வள்ளலார் நினைவு தினம் வருகிற 11ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு அன்றைய தினம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், அதனுடன் இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும் மதுபான விடுதிகள், ஓட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது.
எனவே மேற்கண்ட தினத்தில் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை கள், அதனுடன் இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும் மதுபான உரிம தலங்கள் மூடப்பட்டு இருக்கும். அன்றைய தினத்தில் மது விற்பனைகள் ஏதும் நடைபெறாது. அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.