அறச்சலூர் நவரசம் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி: எம்பி பங்கேற்பு
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் நவரசம் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் ஈரோடு எம்பி பிரகாஷ் பங்கேற்றார்.;
நவரசம் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் எடுத்த படம்.
அறச்சலூர் நவரசம் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் ஈரோடு எம்பி பிரகாஷ் பங்கேற்றார்.
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் நவரசம் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு தேர்வுகளில் வெற்றி பெற ஊக்கமளிக்கும் வகையில் அச்சம் வீடு உச்சம் தொடு என்ற தன்னம்பிக்கை நிகழ்ச்சி கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சிகள் நவரசம் கல்லூரியில் முதல்வர் இ.ராகனி எழில் வரவேற்றார். தொடர்ந்து, நவரசம் கல்லூரியின் தலைவர் தாமோதரன் தலைமை உரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக ஈரோடு தொகுதி எம்பி கே.ஈ.பகரகாஷ் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி சிறப்புரை ஆற்றினார்.
அதனைத் தொடர்ந்து, மாணவிகளிடையே தொழில் வழிகாட்டல் ஆலோசகர் மற்றும் தன்னம்பிக்கை பேச்சாளர்கள் ஏ ஏ அன்பரசு, மொடக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்துறை உதவி பேராசிரியர் கே புகழேந்தி ஆகியோர் மாணவிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் எதிர்காலத்தில் என்ன படிக்கலாம் என்பது குறித்தும் தேர்வில் எளிதில் வெற்றி பெறவும் வழிகாட்டும் வகையில் பேசினர்.
பாடவாரியாக தேர்வில் வெற்றி பெறும் வழிமுறைகள் குறித்து நத்தக்காடையூர் தளபதி அர்ஜுனன் பேசினார். அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் கே.நாகராஜன் வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல் பாடம் தொடர்பாகவும், தாண்டாம் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுநிலை வேதியியல் பட்டதாரி ஆசிரியர் என்.ஆர்.சாந்தகுமார் வேதியியல் பாடம் குறித்தும் பேசினர்.
இதனையடுத்து, தொழில் வழிகாட்டுதல் மற்றும் தன்னம்பிக்கை பேச்சாளர் ஏ.ஏ.அன்பரசு இயற்பியல் பாடம் தொடர்பான ஆலோசனைகளையும், சிவகிரி அரசு மேல்நிலைப் பள்ளியின் உயர்நிலைபள்ளி கணக்கு பட்டதாரி ஆசிரியர் எஸ்.கோமளாதேவி கணித பாடம் குறித்த சந்தேகங்களை தீர்வு காணும் முறைகள் குறித்தும் விளக்கி பேசினர்
கலைமகள் பள்ளி முதுநிலை கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் வி.பி.செல்வி கணினியின் தரவு கட்டமைப்புகள் செயற்கை நுண்ணறிவுகள் அதன் அடிப்படை கட்டமைப்புகள் கணக்கிட்டு அமைப்புகள் பற்றிய மாணவிகளின் சந்தேகங்கள் குறித்து விளக்கி பேசினார்.
இதைத் தொடர்ந்து, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
நிகழ்ச்சியில் கல்லூரியின் பொருளாளர் சி.பழனிசாமி, செயலாளர் கு.செந்தில்குமார், நவரசம் அகாடமி சிபிஎஸ்இ பள்ளியில் தாளாளர் அருண் கார்த்திக், பொருளாளர் பொண்ணுவேல் மற்றும் பள்ளி கல்லூரி கமிட்டி உறுப்பினர்கள் கல்லூரி மாணவிகள் பேராசிரியைகள் கலந்து கொண்டனர். முடிவில், வள்ளி துணை முதல்வர் சீனிவாசன் அனைவருக்கும் நன்றி கூறினார்.