ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் சந்திரகுமார் அபார வெற்றி; டெபாசிட் இழந்த நாதக

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 1,14,439 வாக்குகள் பெற்று 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.;

Update: 2025-02-08 11:00 GMT

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 1,14,439 வாக்குகள் பெற்று 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

ஈரோடு மாவட்டம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

இதையடுத்து, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 5ம் தேதி நடைபெற்றது. திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார், நாதக சார்பில் மா.கி.சீதாலட்சுமி உள்பட 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்த நிலையில், இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில், 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி பெற்றுள்ளார். அவர் மொத்தம் 1,14,439 வாக்குகள் பெற்றுள்ளார்.

நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 23,810 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார்.

Tags:    

Similar News