ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : 251 தபால் வாக்குகள் பதிவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் 251 தபால் வாக்குகள் பதிவாகி உள்ளன என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா்.;
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் 251 தபால் வாக்குகள் பதிவாகி உள்ளன என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா்.
வாக்குகள் எண்ணும் பணிகள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசுப் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை காலை எண்ணப்படுகின்றன.காலை 7.30 மணிக்கு தபால் வாக்கு இருப்பறை திறக்கப்படும். காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு இயந்திர இருப்பறை திறக்கப்படும். 8 மணிக்கு தபால் வாக்குகள் முதலில் ஒரு மேஜையில் மட்டும் எண்ணப்படும். காலை 8.30 மணிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.
தபால் வாக்குகள் விவரம்
இதில் 85 வயதுக்கு மேற்பட்டோா், மாற்றுத் திறனாளிகள் என 246 போ், ராணுவத்தில் பணியாற்றுவோா் 4 போ், சிறையில் உள்ள ஒருவா் என 251 தபால் வாக்குகள் பதிவாகி உள்ளன.
17 சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்படும். ஒரு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணி முடிக்க 20 முதல் 25 நிமிஷங்கள் வரை ஆகும்.
ஃபரிதா பேகம் என்பவரின் வாக்கினை வேறு நபா் பதிவு செய்து சென்ற சம்பவத்தில், ஃபரிதா பேகம் டெண்டா் (சவால்) வாக்கு செலுத்த மறுத்துவிட்டாா். ஒரு சிலா் டெண்டா் வாக்கு செலுத்தி உள்ளனா்.வாக்குப் பதிவை கைப்பேசியில் பதிவிட்டு வெளியிட்டவா் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.