ஈரோட்டில் வணிகர் சங்க புதிய கிளை திறப்பு

ஈரோட்டில் மாமரத்துப்பாளையம் அனைத்து வணிகர்கள் சங்கம் என்ற புதிய கிளை திறக்கப்பட்டது.

Update: 2024-06-14 15:45 GMT
மாமரத்துப்பாளையம் அனைத்து வணிகர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்ட போது எடுத்த படம்.

Erode News, Erode Today News, Erode Live Updates - ஈரோட்டில் மாமரத்துப்பாளையம் அனைத்து வணிகர்கள் சங்கம் என்ற புதிய கிளை திறக்கப்பட்டது.

ஈரோடு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சி.எஸ்.நகர் முதல் கொங்கம்பாளையம் உள்ள சிறு,குறு வணிகர்களை ஒன்றிணைத்து மாமரத்துப்பளையம் அனைத்து வணிகர்கள் சங்கம் என்ற புதிய சங்கம் வெள்ளிக்கிழமை (இன்று) மாலை தொடங்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்ட தலைவர் இரா.க.சண்முகவேல் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் பி.மாதேஸ்வரன் மற்றும் மாவட்ட இளைஞரணி செயலாளர் திரு.அ.லாரன்ஸ் ரமேஷ் ஏற்பாட்டில் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, மாநகரத் தலைவர் ஏ.அந்தோணி யூஜின், மாவட்ட இளைஞரணி பொருளாளர் சி.சேகர், நசியனூர் சங்கத் தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் வெங்கடாசலம் மற்றும் சங்க அலுவல் செயலர் கௌதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில், சங்கத் தலைவராக கண்ணுச்சாமி, செயலாளராக சுரேஷ்குமார், பொருளாளராக தங்கராஜ் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக விஜயக்குமார், பாலமுருகன், சுதர்சன், கார்த்திகேயன் மற்றும் சுதாகர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Tags:    

Similar News