ஈரோட்டில் பக்ரீத் பண்டிகையையொட்டி அதிமுக சார்பில் நலத்திட்ட உதவி

பக்ரீத் பண்டிகையையொட்டி, ஈரோட்டில் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2024-06-17 13:00 GMT

ஈரோடு பெரியார் நகர் பகுதி அதிமுக சார்பில் பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்களுக்கு பகுதி செயலாளர் மனோகரன் அரிசி சிப்பங்களை வழங்கிய போது எடுத்த படம்.

பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஹஜ் பெருநாள் என்றும் கூறப்படும் இந்த பண்டிகை இறைவனின் தூதரான இப்ராகிம் நபிகளாரின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, ஈரோடு மாநகரில் உள்ள பள்ளி வாசல்களில் இன்று அதிகாலை முதலே சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று சிறப்பு தொழுகையி  45ல் ஈடுபட்டனர்.

அந்த வகையில், ஈரோடு பெரியார் நகர் அதிமுக சார்பில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பெரியார் நகர் பகுதி அதிமுக செயலாளர் இரா.மனோகரன் ஏற்பாட்டில் 300 குடும்பங்களுக்கு அரிசி சிப்பங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், ஈரோடு மரப்பாலம் பகுதி செயலாளர் சுப்பரமணி, ஹாஜி பாரூக், மணி, ஈரோடு மாநகர் மாவட்ட பேரவை இணைச் செயலாளர் பாவை அருணாச்சலம், சோழா லோகநாதன், ராஜா காடு வேலு, கனிமார்க்கெட் செல்வராஜ், கோல்ட் சண்முகம், கராத்தே சபாபதி, செல்வராஜ், முகமது சதக்கத்துல்லா, முகமது யூசுப் மற்றும் பெரியார் நகர் பகுதி அதிமுக அனைத்து சார் பணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News