ஈரோட்டில் சமூக நீதிக் கூட்டமைப்பினரின் பாராட்டு விழா

ஈரோடு பெரியார் மன்றத்தில் சமூக நீதிக் கூட்டமைப்பின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

Update: 2024-06-17 14:15 GMT

சமூக நீதிக் கூட்டமைப்பின் பாராட்டு விழாவில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு பெரியார் மன்றத்தில் சமூக நீதிக் கூட்டமைப்பின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

ஈரோட்டில் சமூக நீதிக் கூட்டமைப்பின் சார்பில் குரங்கு பெடல் திரைப்பட இயக்குனர் கமலக்கண்ணன் மற்றும் அதில் நடித்த ஈரோடு கலைத்தாய் அறக்கட்டளை சிறுவர்கள் மற்றும் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பம் போட்டியில் 20 பதக்கங்களை வென்ற ஈரோடு கலைத்தாய் அறக்கட்டளை மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு சமூக நீதிக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குறிஞ்சி தலைமை வகித்தார். கூட்டமைப்பின் நிர்வாகி நிலவன் வரவேற்றார். வழக்குரைஞர் மோகன், தி.க. மாநில அமைப்புச் செயலாளர் சண்முகம், திராவிடர் விடுதலைக்கழக மாநில அமைப்பு செயலாளர் ரத்தினசாமி, தற்சார்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பொன்னையன், இலக்கியத்தளம் அமைப்பின் தலைவர் அன்பழகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கலைத்தாய் அறக்கட்டளை நிர்வாகி மாதேசுவரன் மற்றும் குரங்கு பெடல் திரைப்படத்தின் இயக்குனர் கமலக்கண்ணன் ஆகியோர் ஏற்புரையாற்றினர். முடிவில் கலைத்தாய் அறக்கட்டளையின் நிர்வாகி ராஜசேகர் நன்றி கூறினார். முடிவில், திரைப்பட இயக்குனர் கமலக்கண்ணன், கலைத்தாய் அறக்கட்டளை நிர்வாகி மாதேசுவரன், குரங்கு பெடல் திரைப்படத்தில் நடித்த சிறுவர்கள் மற்றும் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பு போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர் கள் என அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

முன்னதாக, கலைத்தாய் அறக்கட்டளை மாணவர்களின் சிலம்பம், சுருள்வாள் வீச்சு, பறை இசையாட்டம், சாட்டை குச்சியாட்டம், கம்பு மீது நடத்தல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் அறக்கட்டளை ஓவிய ஆசிரியர் சண்முக சுந்தரம் மற்றும் கலைத்தாய் அறக்கட்டளை மாணவ, மாணவிகள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் சமூக நீதிக் கூட்டமைப்பினர் திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News