பவானி அருகே கிணற்றில் ஆண் சடலம்: தீயணைப்பு துறையினர் மீட்பு

பவானி அருகே உள்ள லட்சுமிநகர் மணக்காட்டூரில் கிணற்றில் மிதந்த ஆண் சடலத்தை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

Update: 2022-06-18 10:15 GMT

கிணற்றில் மிதந்த ஆண் சடலத்தை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த லட்சுமிநகர் அருகே உள்ள மணக்காட்டூர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் ஆண் ஒருவர் பிணமாக மிதப்பதாக பவானி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, பவானி தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த ஆணின் உடலத்தை கயிறு கட்டி கிணற்றிலிருந்து மீட்டனர். பின்னர் சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் போலீசார் சம்பவயிடம் வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்தவர் பவானி லட்சுமிநகர் சென்னாநாயக்கனூரை சேர்ந்த மணிவண்ணன் (வயது 35) என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

பின்னர், இறந்த மணிவண்ணன் உடலை மீட்ட சித்தோடு போலீசார் பவானி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News