ஈரோட்டில் சாலையோரம் வீசப்பட்டு கிடந்த தரமான அரசு மருத்துவமனை மாத்திரைகள்

ஈரோட்டில் தரமான அரசு மருத்துவமனை மாத்திரைகள் சாலையோரம் வீசப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-11-26 20:30 GMT

ஈரோட்டில் சாலையோரம் வீசப்பட்டு கிடந்த தரமான அரசு மருத்துவமனை மாத்திரைகள்.

ஈரோட்டில் தரமான அரசு மருத்துவமனை மாத்திரைகள் சாலையோரம் வீசப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு தில்லை நகர் தெப்பக்குளம் வீதியில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் சாலையோரத்தில் நேற்று வீசப்பட்டுக் கிடந்தன. இந்த மாத்திரைகள் அனைத்தும் 2025ம் ஆண்டு வரை காலாவதி உள்ளவை ஆகும்.

இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சிக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அந்த மாத்திரைகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து, இந்த மாத்திரையில் குறித்து மருத்துவரிடம் விசாரிக்கையில், அந்த மாத்திரைகள் கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்கப்படும் இரும்பு சத்து மாத்திரைகள் என்பது தெரிய வந்தது.

மாத்திரைகள் ஏன் அங்கு வீசப்பட்டது? அவை ஈரோடு அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட வேண்டிய மாத்திரைகளா? அல்லது அரசு மருத்துவா்களோ? மருந்தக பணியாளர்களோ, இந்தப் பகுதியில் வீசி சென்றனாரா? என்பது குறித்து ஈரோடு மாநகராட்சி நல அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News