பவானி அம்மாபேட்டையில் நவீன இயந்திரங்களால் மின்னல் வேகத்தில் நெல் அறுவடை..!
பவானி அம்மாபேட்டையில் நவீன இயந்திரங்களால் மின்னல் வேகத்தில் நெல் அறுவடை.அத்தைக்கு பற்றி இப்பதிவில் காணலாம்.;
பவானி, அம்மாபேட்டை பகுதிகளில் விவசாயிகள் இயந்திரம் மூலம் நெல் அறுவடை பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மேட்டூர் வாய்க்கால் பாசனத்துக்கு கடந்த ஜன. 15ம் தேதி தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, நெல் சாகுபடி வயல்களில் ஈரப்பதம் காயும் வரையில் விவசாயிகள் காத்திருந்தனர்.
இயந்திரம் மூலம் நெல் அறுவடைக்கு மணிக்கு ரூ.2000 கட்டணம்
இயந்திரம் மூலம் நெல் அறுவடைக்கு மணிக்கு ரூ.2 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வயல்கள் பெரிய அளவில் இருந்தால் அறுவடை பணிகள் வேகமாக நடைபெறுவதாகவும், சின்ன, சின்ன வயல்களாக இருந்தால் இயந்திரத்தை கொண்டு அறுவடை செய்யும் நேரம் சற்று அதிகரிப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
பல்வேறு மாவட்டங்களிலிருந்து அறுவடை இயந்திரங்கள் வருகை
அறுவடைக்காக தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து அறுவடை இயந்திரங்கள் பவானி, அம்மாபேட்டை பகுதியில் மேட்டூர் வாய்க்கால் பாசனப் பகுதிகளில் முகாமிட்டுள்ளன.
விவசாயிகள் மகிழ்ச்சி
அறுவடை பணிகள் நடைபெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உற்பத்தி செலவை ஈடுகட்ட இந்த அறுவடை உதவும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.