பெருந்துறையில் ரூ.900 கோடியில் மில்கி மிஸ்ட் தொழிற்சாலை விரிவாக்கம்: கூடுதலாக 450 பேருக்கு வேலைவாய்ப்பு

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ரூ.900 கோடியில் மில்கி மிஸ்ட் தொழிற்சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது . இதனால், கூடுதலாக 450 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.;

Update: 2025-02-06 10:45 GMT

மில்கி மிஸ்ட்.

பெருந்துறையில் ரூ.900 கோடியில் மில்கி மிஸ்ட் தொழிற்சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது . இதனால், கூடுதலாக 450 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை தலைமையிடமாக கொண்டு 1997-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது மில்கி மிஸ்ட் நிறுவனம். இங்கு பால் மட்டுமல்லாமல் தயிர், பன்னீர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட 20 வகை பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த நிறுவனம் வரும் ஆண்டில் ரூ.2,500 கோடி அளவுக்கு விற்பனையை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிகிறது.

தமிழ்நாடு மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் இந்த நிறுவன பொருட்களுக்கு வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில், மில்கி மிஸ்ட் நிறுவனத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி மொத்தமாக இந்நிறுவனம் ரூ.1,777 கோடி முதலீடு செய்வதாக இருந்தது. இதில் முதற்கட்டமாக ரூ.900 கோடியை மில்கி மிஸ்ட் நிறுவனம் முதலீடு செய்து உள்ளது. இந்த தொழிற்சாலையை 2.26 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் விரிவாக்கம் செய்து பால் பொருள் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதன் மூலம் கூடுதலாக 450 பேர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News