கோபி சந்தையில் செவ்வாழைத் தார் ரூ.1300க்கு விற்பனை..!

கோபி சந்தையில் செவ்வாழைத் தார் ரூ.1300க்கு விற்பனை.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.;

Update: 2025-02-06 11:15 GMT

கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் செவ்வாழை தார் ஒன்று 1,300 ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற வாழைத்தார் ஏலத்தில் பல்வேறு ரகங்களின் விலை விவரம்:

செவ்வாழை விலை உயர்வு

செவ்வாழை கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து 1,300 ரூபாய்க்கு விற்பனையாகி வருவதால் செவ்வாழை பயிரிட்டு உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்த வார வாழைத்தார் வியாபாரம்

இந்த வாரம் மொத்தம் 3,837 வாழைத்தார் வரத்து இருந்த நிலையில் ரூ. 10,20,000க்கு விற்பனையானது.


தேங்காய் ஏலம்

இந்த வாரம் நடைபெற்ற தேங்காய் ஏலத்தில் தேங்காய் ஒன்று 11 ரூபாய் முதல் 34 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம் 18,590 தேங்காய் வரத்து இருந்த நிலையில் ரூ. 4,12,000க்கு விற்பனையானது.

Tags:    

Similar News