பெருந்துறையில் ரூ.2.19 கோடிக்கு கொப்பரை ஏலம் போனது..!
பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 2.19 கோடிக்கு கொப்பரை ஏலம் நேற்று நடைபெற்றது.;
நாமக்கல் : பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற கொப்பரை ஏலத்தில் ரூ.2.19 கோடி மதிப்பிலான கொப்பரை விற்பனையானது.
ஏலத்திற்காக பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 4,272 மூட்டைகளில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் கிலோ கொப்பரையை கொண்டு வந்திருந்தனர்.
முதல் தர கொப்பரை விலை
குறைந்தபட்சம்: கிலோ ரூ.137.17
அதிகபட்சம்: கிலோ ரூ.149.79
இரண்டாம் தர கொப்பரை விலை
குறைந்தபட்சம்: கிலோ ரூ.25.89
அதிகபட்சம்: கிலோ ரூ.141.42
இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.2 கோடியே 19 இலட்சம் மதிப்பிலான கொப்பரை விற்பனை செய்யப்பட்டது.