ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் கலாச்சார விழா போட்டி
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் கொங்கு கல்ச்சுரல் பெஸ்ட் 2025 எனும் கலாச்சார விழா போட்டி சனிக்கிழமை (இன்று) நடைபெற்றது.;
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் கொங்கு கல்ச்சுரல் பெஸ்ட் 2025 எனும் கலாச்சார விழா போட்டி சனிக்கிழமை (இன்று) நடைபெற்றது.
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நுண்கலை மன்றம் சார்பில் கல்லூரியின் பல்வேறு துறைகளைச் சார்ந்த மாணவ மாணவிகளுக்கான கொங்கு கல்ச்சுரல் பெஸ்ட் - 2025 எனும் கலாச்சார விழா போட்டி நடைபெற்றது.
கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியின் கம்ப்யூட்டர் நெட்வொர்க் துறையின் தலைவர் வி.ஸ்ரீதரன், கொங்கு பொறியியல் கல்லூரியின் மின்னணு மற்றும் கருவி பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் ஆர்.மெளலீஸ்வரப்பிரபு மற்றும் கொங்கு கட்டிடக்கலைக் கல்லூரியின் இணைப் பேராசிரியர் டி.பிரபாகரன் ஆகியோர் போட்டிக்கு நடுவர்களாகப் பங்கேற்றனர்.
முன்னதாக, கல்லூரியின் தாளாளர் பி.டி.தங்கவேல், கல்லூரியின் முதல்வர் ஹெச்.வாசுதேவன் மற்றும் போட்டியின் நடுவர்கள் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர்.
இதில், அனைத்துத் துறைகளைச் சார்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று தனி நபர் நடனம், குழு நடனம், பாரம்பரிய நடனம், மெளன நாடகம், பாட்டு போன்ற கலைகளின் வாயிலாகப் பல்வேறு சமூகச் சிந்தனை மிக்க கருத்துகளை தங்களின் கலைத்திறன் மூலம் வெளிப்படுத்தினர்.
இந்த விழா முடிவில் போட்டியில் முதலிடம் பெற்ற கணினிப் பயன்பாட்டியல் துறைக்கும், இரண்டாமிடம் பெற்ற இளநிலை கணினி அறிவியல் துறைக்கும் தாளாளர், முதல்வர் மற்றும் நடுவர்கள் பரிசுக் கோப்பைகளை வழங்கினர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.கோகிலா, மன்றப் பொறுப்பாளர்கள் எம்.சர்மிளாதேவி, ஆர்.யுவரேகா, எஸ். அருணாச்சலேஸ்வரன் மற்றும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் கே.எம்.குமரகுரு மற்றும் வி. அன்புமணி ஆகியோர் செய்திருந்தனர்.