மொடக்குறிச்சியில் ஆட்டோ ஸ்டாண்டை இடமாற்ற பொதுமக்கள் கோரிக்கை

மொடக்குறிச்சியில் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டை இடமாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.;

Update: 2025-01-25 06:51 GMT

ஈரோடு : மொடக்குறிச்சியில் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டை இடமாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

பள்ளி அருகே ஆட்டோ நிறுத்தம்

மொடக்குறிச்சி நால்ரோடு பேருந்து நிறுத்தம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு, 350-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா்.

ஆட்டோக்கள் மாணவா்களுக்கு இடையூறு

இந்நிலையில், இப்பள்ளி முன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆட்டோ நிறுத்தம் அமைக்கப்பட்டு, ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. சுமாா் 35 ஆட்டோக்கள் வரை நிறுத்தப்படுகின்றன. இதனால், பள்ளி மாணவா்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.

ஆட்டோ நிறுத்தத்தை இடமாற்ற கோரிக்கை

எனவே, இந்த ஆட்டோ நிறுத்தத்தை இடமாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரூராட்சித் தலைவா் பதில்

இதுகுறித்து மொடக்குறிச்சி பேரூராட்சித் தலைவா் செல்வாம்பாள் சரவணனிடம் கேட்டபோது, ஆட்டோ நிறுத்தத்தை இடமாற்றக் கோரி பொதுமக்கள் சாா்பில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து பேரூராட்சியில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு வட்டாட்சியா், காவல் ஆய்வாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

எனவே, ஆட்டோ நிறுத்தத்தை இடமாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

Tags:    

Similar News