கோபி வெங்கடேஸ்வரா கலை அறிவியல் கல்லூரியில் காசநோய், புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
ஈரோடு மாவட்டம் கோபி வெங்கடேஸ்வரா கலை அறிவியல் கல்லூரியில் காசநோய், புகையிலை, தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.;
கோபி வெங்கடேஸ்வரா கலை அறிவியல் கல்லூரியில் காசநோய், புகையிலை, தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் கோபி வட்டாரம் சிறுவலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்குட்பட்ட ஒத்தக்குதிரையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காசநோய் இல்லா ஈரோடு இயக்கம், புகையிலை எதிர்ப்பு, தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காசநோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், காசநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள், காசநோய் இல்லா ஈரோடு இயக்க நோக்கம் மற்றும் பயன்கள், காசநோய் ஒழிப்பில் மாணவர்களின் பங்கு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
தொடர்ந்து, புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள், உடல் நல பாதிப்புகள், புற்றுநோய் பாதிப்புகள், இளைய சமுதாயத்தினரின் சீரழிவுகள், புகையிலை தடுப்புச் சட்டங்கள், புகையிலை பழக்க மீட்பு ஆலோசனை, தொழு நோயின் ஆரம்ப நிலை அறிகுறிகள், தொழு நோய்க்கான ஆரம்ப நிலை சிகிச்சையால் தவிர்க்கப்படும் அங்கஹுனங்கள், தொழு நோய் தீவிர கண்டறிதல் முகாமின் நோக்கம் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.
முகாமில் ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக் கல்வியாளர் சிவகுமார், மாவட்ட சுகாதார அலுவலக மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு சமூக சேவகர் சங்கீதா, நடமாடும் மருத்துவக் குழு மருத்துவ அலுவலர் மரு.பிரவீனா, காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சிவகுமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரகுபதி, வட்டார மருத்துவமல்லா மேற்பார்வையாளர் முருகேசன், கல்லூரி துணை முதல்வர் முனைவர் நஞ்சப்பா, கல்லூரி விரிவுரையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் சேதுராமன், சுகந்த், ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மைய ஆலோசகர் ஸ்ரீதர், செவிலியர்கள், நடமாடும் மருத்துவக் குழுவினர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் 300 பேர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் காசநோய், தொழுநோய், புகையிலை விழிப்புணர்வு கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டு, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்வின் இறுதியாக அனைவராலும் காசநோய் இல்லா ஈரோடு உருவாக்கம் மற்றும் புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.