பவானி இரட்டைக்கரடு தனியார் நிறுவனத்தில் சுகாதார விழிப்புணர்வு முகாம்

பவானி அருகே இரட்டைக்கரடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காசநோய் ஒழிப்பு மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2024-09-04 11:15 GMT

இரட்டைக்கரடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காசநோய் ஒழிப்பு மற்றும் புகையிலை எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

பவானி அருகே இரட்டைக்கரடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காசநோய் ஒழிப்பு மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (4ம் தேதி) நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் மருத்துவ பணிகள் (காசநோய்) ராமச்சந்திரன் வழிகாட்டுதலின்படி, ஜம்பை வட்டாரம் மைலம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையப் பகுதிக்கு உட்பட்ட இரட்டை கரடு கவின் கேர் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு காசநோய் ஒழிப்பு மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காச நோயின் ஆரம்ப அறிகுறிகள், காச நோயின் பாதிப்புகள்,காச நோய்க்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை முறைகள், காச நோய்க்கான சிகிச்சை இலவசமாக கிடைக்கும் இடங்கள், புகையிலை பயன்பாடுகளினால் ஏற்படும் தீமைகள், புற்றுநோய் பாதிப்புகள், இளைய தலைமுறையினரின் சீரழிவுகள், புகையிலை தடுப்புச் சட்டங்கள்,புகையிலை பழக்க மீட்பு ஆலோசனை குறித்து விளக்கமாக சுகாதார நலக் கல்வி வழங்கப்பட்டது.


இம்முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் மருத்துவ பணிகள் (காச நோய்) அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலக மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு சமூக சேவகர் சங்கீதா, வட்டார மருத்துவ அலுவலர் மாணிக்கவேல் ராஜன், நடமாடும் மருத்துவ குழு மருத்துவ அலுவலர் கோகுல கிருஷ்ணன், கவின் கேர் நிறுவன மேலாளர்கள் மற்றும் அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமி, காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் செல்வம், சுகாதார ஆய்வாளர் ஜெயஹரி, மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.


மேலும், இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை காச நோய்க்கு உண்டான சளிப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News