ஈரோடு பூம்புகாரில் விநாயகர் சதுர்த்தி கண்காட்சி விற்பனை துவக்கம்

ஈரோடு மேட்டூர் சாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி கண்காட்சி விற்பனை துவங்கியது.

Update: 2024-09-03 14:45 GMT

விநாயகர் சதுர்த்தி கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை ஆர்வத்துடன் பார்வையிட்ட பெண்கள்.

ஈரோடு மேட்டூர் சாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி கண்காட்சி விற்பனை துவங்கியது.

தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழகம் பூம்புகார் விற்பனை நிலையம் சார்பில் விநாயகர் சதுர்த்தி கண்காட்சி மற்றும் விற்பனையானது ஈரோடு மேட்டூர் சாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலைய உள்வளாகத்தில் நேற்று (2ம் தேதி) தொடங்கியது. இந்த கண்காட்சி வரும் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இக்கண்காட்சியில் பஞ்சலோகம், பித்தளை, பேப்பர்கூழ், மண், வெள்ளெருக்கு வேர், மார்பில் பவுடர், மாவுக்கல், கருங்கல், போன்றவைகளினால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள், வெண் மரம், நூக்க மரம், கருப்பு உலோகம், வெள்ளை உலோகம், ஸ்படிக விநாயகர் மற்றும் தஞ்சாவூர் ஓவியம், கலை தட்டுகளில் செய்யப்பட்ட விநாயகர் மற்றும் பல்வேறு வகை வண்ண வடிவங்களில் விநாயகர் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இவ்வருடம் புதிய வரவாக விதை விநாயகர், மயில் விநாயகர், நந்தி விநாயகர், ஆதியந்த பிரபு, நடன விநாயகர், மியூசிக் விநாயகர் ஆகியவை கண்காட்சியில்வைக்கப்பட்டு உள்ளது. இக்கண்காட்சியில் ரூ. 100 முதல் ரூ.1 லட்சம் வரை உள்ள விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் குறிப்பிட்ட பொருட்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இலக்கு ரூ.4 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று விற்பனை நிலைய மேலாளர் அருண் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News