மகாவீர் ஜெயந்தி; ஈரோடு மாவட்டத்தில் ஏப். 4-ல் டாஸ்மாக் கடை, பார்கள் மூடல்

Erode news, Erode news today- மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் ஏப்ரல் 4ம் தேதி டாஸ்மாக் கடை, பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2023-04-01 10:15 GMT

Erode news, Erode news today- ஏப்ரல் 4ல், டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படாது (கோப்பு படம்)

Erode news, Erode news today- மகாவீர் ஜெயந்தி, வரும் ஏப்ரல் 4-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் டாஸ்மாக் கடை, பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

வருகிற ஏப்ரல் 4ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படவுள்ளது. மகாவீர் ஜெயந்தி அன்று ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கம் அந்த வகையில், இந்த வருடமும் மகாவீர் ஜெயந்தி அன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாவீர் ஜெயந்தியை வரும் ஏப்ரல் 4-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடை, பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில், ஈரோடு மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு 'மது விற்பனை இல்லாத நாளாக" அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, வரும் 4-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இயங்கும் பார்கள், கிளப்கள் மற்றும் ஓட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும். அன்றைய தினங்களில் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது என்றும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News